மஞ்சு விரட்டு போட்டியில் 5பேர் காயம்..
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே காடம்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்கு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இதில் பல்வேறு நபர்கள் கலந்து கொண்டனர்.கண்மாய் மற்றும் வயல் பகுதியில் மாடுகள் அவிழ்த்துவிட பட்டன.இதனை வீரர்கள் அடக்கினார்.இதில் கலந்து கொண்டவர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 5 பேர் காயமடைந்தனர்.