சேலம் 8 வழிச்சாலை திட்டம் : சீமான் கைது..!

Default Image

சேலம் – சென்னை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 15 ஆம் தேதி சேலத்தில்  மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று  எஸ்.டி.பி.ஐ(SDP) கட்சியின் புதிய மாநில தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், சென்னை-சேலம்  பசுமை வழிச்சாலை அல்ல, இது பசுமையை அழிக்கும் சாலை.எஸ்.டி.பி.ஐ 8 வழிச்சாலையை எதிர்த்து   வருகிற 15 ம் தேதி சேலத்தில்  மாபெரும் போராட்டம் நடத்தினர்.

சேலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 ரவுடிகளை போலீசார் கைது  செய்துள்ளனர்.மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்திய அன்னதானப்பட்டி ஜவஹர், அறிவு உள்ளிட்ட 19 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்குகிறது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை  தொடங்கி வைதத்தர்.

1993-ம் ஆண்டு திறக்கப்பட்ட சேலம் விமான நிலையம், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் ஓராண்டுக்குள் மூடப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் மீண்டும் விமான போக்குவரத்தைத் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.இந்தநிலையில் நபர் ஒருவருக்கு ஒரு வழிப் பயணத்திற்கு ரூ.1,499 என ட்ரூஜெட் நிறுவனம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. 72 பயணிகள் அமரும் வகையில் சிறிய ரக விமானம் இயக்கப்படவுள்ளது.

சேலம் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 160 ஏக்கர் நிலப்பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்டது.பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கடந்த மே மாதம் 12-ந் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலைய விரிவாக்கத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து பேசினார்.
இதற்கு எதிராக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசுக்கு எதிராக விவசாயிகளை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஓமலூர் போலீ சார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சீமான் முன்ஜாமீன் பெற்றார்.

சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.

இதனை தொடர்ந்து சீமான் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ் மறு உத்தரவு வரும்வரை ஓமலூர் போலீஸ் நிலையத்தில் சீமான் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்து போடவேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து அவர் தினமும் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். மேலும் சேலம்-சென்னை 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சென்றார் சீமான்.
அங்கிருந்த போலீஸ் சீமானை சந்திக்க விடவில்லை. சீமானும் விவசாயிகளை சந்திக்காமல் செல்ல மாட்டேன் என்று கூறினார். அப்போது போலீசார் சீமானை திடீரென கைது செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest
bipin rawat accident pilot