தாமரை தமிழகத்தில் மலரும் : பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை..!
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி என்பதை பாஜகதான் முடிவு செய்யும். தமிழ்நாட்டுக்கு பாஜக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. 10 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.ஊழல் ஆட்சியை ஒழித்துக்கொண்டேய வருகிறது எங்கள் கட்சி.பாஜக தமிழகத்தில் மலரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும்
போலி பகுத்தறிவு உள்ளவர் கமலஹாசன், இவரே மய்யம் என்று கட்சி ஆரம்பித்துள்ளார். அதில் அவர் மட்டும் தான் இருப்பர்.அவர் கட்சி ஆரம்பித்ததும் அமாவாசை நாளில். கொடி ஏற்றியதும் அமாவாசை நாளில்தான்.
பாஜக – அதிமுக உறவு தாய் – மகன் போன்றது. மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.மேலும் நீட் தேர்வு குறித்து பிரச்சனை சரிசெய்யப்படும்.
மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அவர்களது ஜனநாயக உரிமை என்றார்.மேலும் பெட்ரோல் டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.