கோவையில் உயிரிழந்த மாணவி லோகேஷ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு!
மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோயம்புத்தூரில் அருகே நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவி உயிரிழந்தார். 2ஆவது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்தார்.
மாணவி உயிரிழந்த காரணத்தால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.
பின்னர் உயிரிழந்தது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பின்னர் இந்த வழக்கின் அடிப்படையில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பயிற்சியின்போது உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் முதலமைச்சர் பழனிசாமி நிதியுதவி வழங்கியுள்ளார்.இது தொடர்பாக மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கல்லூரி மாணவர்களுக்கு உரிய அனுமதி பெறாமல் பயிற்சி அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.முறையற்ற பயிற்சி வழங்கிய ஆறுமுகம் என்பவரை கைது செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.