ENGLAND VS INDIA:ரோகித் சர்மா அபார சதம்,விராட் கோலி அரைசதம்!இந்திய அணி செம!
இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.இந்த ஆட்டம் நட்டிங்கமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ச்சில் நடைபெறுகின்றது.
இன்றைய ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய்( 38)மற்றும் ஜானி பைர்ஸ்ஸ்டோ( 38)குல்தீப் சுழலில் விக்கெட்டை பரிக்கொடுத்தனர்.பின்னர் இறங்கிய ரூட் மற்றும் கேப்டன் மோர்கனும் இந்திய அணியின் சுழலில் விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.
பின்னர் இங்கிலாந்து அணி வீரர் பட்லர் அரைசதம் அடித்தார்.அடித்த வேகத்தில் 53 ரன்களில் வெளியேறினார்.பின்னர் ஸ்டோக்ஷும் அரை சதம் அடித்த நிலையில் 50 ரன்களில் வெளியேறினார்.மேலும் டேவிட் வில்லி 1 ரன்களில் வெளியேறினார்.பின்னர் அலி (24),ரஷித் (22) மற்றும் பிளாங்கெட் 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியின் பந்து வீச்சில் குல்தீப் 6 விக்கெட்டுகள்,உமேஷ் 2 மற்றும் சாஹல் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.குல்தீப் 10 ஓவர்களில் 25 விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.
இதனால் இந்திய அணிக்கு 269 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.பின்னர் களமிறங்கிய இந்திய அணி அணி 32 ஓவர்களில் 224 ரன்கள் அடித்துள்ளது.இதில் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார் .இது இவருக்கு 18-வது சதம் ஆகும்.இதேபோல் விராட் அரைசதமடித்துள்ளார்.
தற்போது ரோகித் 108 மற்றும் விராட் 74 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.இந்திய அணி 45 ஓவர்களில் 216 ரன்கள் அடித்துள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.