நேற்று ஒருநாள் பெய்த மழைக்கே சென்னை மிதக்கின்றது..!சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை
சிஎம்டிஏ விதிமீறல் கட்டடங்களை தடுக்கத் தவறிய நிலையில் அதை ஏன் கலைக்கக் கூடாது? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நுங்கப்பாக்கம் லேக் ஏரியில் விதிமீறி ஆறு மாடி கட்டடத்திற்கு சீல் வைக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு விசாரித்தது.பின்னர் சிஎம்டிஏ விதிமீறல் கட்டடங்களை தடுக்கத் தவறிய நிலையில் அதை ஏன் கலைக்கக் கூடாது? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.இன்னும் 2015 வெள்ளத்தில் இருந்து அதிகாரிகள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. ஆக்கிரமிப்பாளர்களிடம் அதிகாரிகள் பணம் பெறுவதால் விதிமீறல் கட்டடங்கள் பெருகுகின்றது.சென்னை நேற்று ஒருநாள் பெய்த மழைக்கே மிதந்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.