அதில் என்னை பார்க்கும்போது ரொம்ப கேவலமாக இருந்தேன் : உண்மையை உடைத்த நடிகை..!
இயல்பாக நடிப்பது மட்டும் அல்லாமல் இயல்பாகவே பேசுபவர் நடிகை ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.ஒரு பேட்டியில் ’என் முதல் படத்தில் என்னை பார்க்கும்போது ரொம்ப கேவலமாக இருந்தேன். போகப் போகத்தான் சினிமாவில் என்னை நானே வளர்த்துக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொண்டேன்.
ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தெலுங்கு திரைப்படங்களில் 50 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவருடைய தாத்தா அமர்நாத்தும் ஒரு நடிகர் ஆவார்.இவர் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றியாளராக வந்தார்.
இவர் கூறியதாவது , இப்போது வருகிற கதாநாயகிகள் வரும்போதே உடை அலங்காரம், திறமை, அறிவு என்று சூப்பராக வருகிறார்கள். கடின உழைப்பு இருக்கவேண்டும். கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருக்கவேண்டும். இதெல்லாம் இருந்தாலே போதும். யார் வேண்டுமானாலும் நல்ல நிலைமைக்கு வரலாம்’ என்று கூறி இருக்கிறார்.
இவரை நடிகர் விஜய்சேதுபதியுடன் சேர்த்து பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளநிலையில் ஐஸ்வர்யா நடிப்பில் தற்போது ‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி ஸ்கொயர்’, ‘வடசென்னை’, ‘செக்கச் சிவந்த வானம்’ உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகிறது. விரைவில் இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.