FIFA 2018 : உலகக்கோப்பையை வென்றால் விடுமுறை..!
FIFA 2018 : உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – பெல்ஜியம் அணிகள் மோதின.இதில் பிரான்ஸ் அணி 51 வது நிமிடத்தில் அடித்த கோலால் 1-0 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து – குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இங்கிலாந்து அணி பலவருடங்களுக்கு பிறகு இப்போதுதான் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி ஒவ்வொரு போட்டியையும் தனது இறுதி போட்டியாகவேய நினைத்து விளையாடி வருகிறது, கோப்பையை வெல்லும் என்று இங்கிலாந்து மக்கள் நம்புகிறார்கள். இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெறுகிறது. ஒருவேளை இங்கிலாந்து வெற்றி பெற்றால் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாட பொது வங்கி விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.