2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம் – கே.சி.கருப்பணன்

kc karupanan - Annamalai

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பாஜகவில் இருந்து அதிமுக விலகியதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக தொடர வேண்டும் என்று பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, பாஜகவில் இருந்து அதிமுக விலகுவதாக அதிமுக அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் அவர்கள், அண்ணாமலை ஒரு சின்ன பையன். அவர் அம்மா ஜெயலலிதா, அண்ணா அவர்களை விமர்சித்து பேசுகிறார். இதை எப்படி தாங்க முடியும். ஓரளவுக்கு தான் தாங்கி கொள்ள முடியும்.

2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? எத்தனை பூத்களில் அவர்களுக்கு வாக்களிக்க அலிருக்கும்? இன்று பாஜகவை வேண்டாம் என்று கூறியதால், அனைத்து இடங்களிலுமே வரவேற்பு கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்