காவிரி விவகாரத்தில் நடிகர் சித்தார்த்திற்கு தொடர்பில்லை – சீமான் ஆவேசம்!

SEEMAN

காவிரி நீர் பிரச்னைக்கும், நடிகர் சித்தார்த்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை, அரசியல்வாதிகளிடம் கேட்க வேண்டிய கேள்வியை ஒரு கலைஞனிடம் கேட்பது என்ன நியாயம் என்று சீமான் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

நடிகர் சித்தார்த் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் சித்தார்த். சு.அருண்குமார் இயக்கிய இந்த படத்தை சித்தார்த் தான் தயாரித்தும் இருந்தார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சித்தார்த் சமீபத்தில் பெங்களூரு சென்று இருந்தார்.

அப்போது ஓர் அரங்கில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தார், திடீரென அந்த அரங்கினுள் நுழைந்த கன்னட அமைப்பை சேர்ந்த சிலர், தற்போது காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையே பேசப்பட்டு வருகிறது.

இந்த சமயத்தில் சினிமா நிகழ்ச்சி தேவையில்லை என்று தடுத்து நிறுத்தினர். அப்போது பத்திரிகையாளர்களுக்கு நன்றி கூறி சித்தார்த் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதற்கு பிரபலங்கள் முதல் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அனைவரும் ஒன்றாக எதிர்க்கின்றனர். இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் பேசி ஒரு தீர்வு காண வேண்டும், ஒரு கலைஞனிடம் கேட்பது என்ன நியாயம்.

இது மாதிரி கன்னட நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பகுதி வெளிவந்தது. அதற்கு தமிழகத்தில் நாம் எந்த இடையூறும் செய்யவில்லை, வரவேற்பு தான் வழங்கினோம். நடிகர் சித்தார்த் ஒரு கலைஞன் அவருக்கும் தண்ணி பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் காவிரி தண்ணி கொடுங்க என்று கேட்கவும் இல்லை.

அது அரசியல் தலைவர்கள் பேச  தீர்வு காண வேண்டும், ஆனால் ஒரு நடிகரிடம் எப்படி இது போல் கேள்வி கேட்க முடியும். அந்த அரங்கத்துக்குள் காவலர்கள் இருந்தும் கேள்வி கேட்டவர்களை ஏன் தடுக்கவில்லை. இது தமிழ்நாடு மாநிலத்தில அப்படி செய்தால் அவர்கள் கைது செய்து, பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வார்கள். அந்த அடிப்படை பண்பு கூட அந்த மாநிலத்தில் ஏன் இல்லை, இதெல்லாம் கடுமையாக ககண்டிக்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார்.

இதற்கிடையில்ம், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூறிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath
sabarimalai (1)
18.11.2024 Power Cut Details