கால அவகாசம் நீட்டிப்பு இல்லை…இன்றே கடைசி நாளை முதல் ரூ.2,000 செல்லாது!

Rs2000

நாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு இன்றே கடைசி நாளாகும். மேலும், இந்த ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலஅவகாசம் நீடிக்கப்படவில்லை.

கடந்த மே மாதம் நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில், 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

பின்னர், மே மாதம் 23-ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் (செப்டம்பர் 30-ஆம் தேதி) இன்று வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, தங்களது 2000 நோட்டுகளை பல்வேறு இடங்களில் கொடுத்து மாற்றி வந்தனர்.

இந்நிலையில், 2016 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த 2,000 ரூபாய் நோட்டு, பெரிய தொகை என்பதால், அதற்கு சில்லறை கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது என்ற புகார்கள் முன்பே  எழுந்தது. இதனையடுத்து, ATM-களிலும் ரூ.2000 நோட்டுகள் கிடைப்பதை மெல்ல மெல்ல குறைத்தன.

இதனால், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற வாய்ப்புள்ளதாக இணையத்தில் தகவல்கள்  வெளியானது. அந்த தகவலின்படி, புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் வங்கியில் கொடுத்து மற்றும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

இந்த ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலஅவகாசம் நீடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், 2,000 நோட்டும் மாற்றும் அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், நேற்றையை தினம் முதல் ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

ஏற்கனவே, 2000 ரூபாய் நோட்டுகள் பெட்ரோல் பங்குகளில் வாங்கப்பட மாட்டாது என்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றுங்கள் எனவும் பெட்ரோல் பங்குகள் சங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்