நடிகர் சந்தானம் தலைமறைவு..! முன் ஜாமின் மனு தாக்கல்…!
நடிகர் சந்தானத்துக்கும், சண்முகசுந்தரம் என்ற கட்டுமான நிறுவனருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கைகலப்பு ஏற்பட சந்தானம், பிரேம் மற்றும் சண்முகசுந்தரத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் காயம் அடைந்துள்ளனர்.
பிரேம் ஆனந்த், பா.ஜ.வின் தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவர் என்று கூறப்படுகிறது. அதனால் சந்தானத்தை கைது செய்ய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் சந்தானம் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் கைது செய்யப்படலாம் என்ற காரணத்தினால் நடிகர் சந்தானம் முன் ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.