எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு:தீர்ப்பை விமர்சித்த தங்கதமிழ்ச்செல்வன்!வழக்கு 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்த விவகாரத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முன் ஆஜரானார்.
கடந்த ஜூன் 29-ஆம் தேதி தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்ததாக தினகரன் அணியின் எம்எல்ஏ தங்கதமிழ் செல்வனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மேலும் தினகரன் தரப்பு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் 2 வாரங்களில் பதிலளிக்க அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நோட்டீஸ் அனுப்பினார். 18 எம.எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட இருவேறு தீர்ப்புகள் பற்றி விமர்சித்ததாக புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை விசாரித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்த விவகாரத்தில் தங்கதமிழ்ச்செல்வன் விளக்கம் அளிக்க 2 வாரம் அவகாசம் அளித்து வழக்கை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.