மீண்டும் காலிறுதிக்கு முன்னேறிய ரபெல் நடால் ..!

Default Image

ரஃபேல் “ரஃபா” நடால் பெரேரா(Rafael “Rafa” Nadal Parera) தொழில்முறை டென்னிசு வீரர் ஆவார். டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் புள்ளிவிவரத்தின் படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது இவர் தரநிலைகளில் முதல் இடத்தில் உள்ளார். களிமண் ஆடுகளங்களில் பல வெற்றிகளைப் பெற்றதினால் இவர் கிங் ஆஃப் கிளே என அழைக்கப்படுகிறார்.அனைத்து விதமான ஆடுகளங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலமாக டென்னிசு வரலாற்றில் சிறப்பான வீரராக அறியப்படுகிறார்.

Image result for நடால்டென்னிஸில் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனைப் படைத்திருப்பவர் ஸ்பெயின் நாட்டின் ரபெல் நடால். செம்மண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனை மட்டும் 11 முறை வென்ற உலக சாதனைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலியா ஓபனை 2009-ம் ஆண்டிலும், விம்பிள்டனை 2008 மற்றும் 2010-லும், அமெரிக்கா ஓபரை 2010, 2013, 2017-லும் கைப்பற்றியுள்ளார்.

Image result for நடால்நடால் 16 முறை பெருவெற்றித் தொடர் (டென்னிசு) கோப்பை, ஒன்பது முறை பிரெஞ்சு ஓப்பன்வாகையாளர் (2005,2006,2007,2008, 2010,2011,2012,2013,2014). போட்டிகளில் வெற்றி பெற்றார். [6] இதன் மூலம் யோர்ன் போர்கின் சாதனையை ஈடுசெய்த இவர் 2014-இல் ஒன்பதாவது முறையாக அப்பட்டத்தை வென்றார். இவருக்கும் ரோஜர் ஃபெடரருக்கும் புகழ்பெற்ற டென்னிஸ் எதிரிடை உள்ளது. ரோஜர் ஃபெடரர் உடன் 33 போட்டிகளை விளையாடி நடால் 23 போட்டிகள் இன்று வரை வெற்றிபெற்றுள்ளார்.

Image result for நடால்ரபெல் நடால் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் காலிறுதிக்கு கடைசியாக 2011-ம் ஆண்டுதான் தகுதி பெற்றிருந்தார். அதன்பிறகு நான்கு சுற்றுகளுக்கு மேல் முன்னேறியது கிடையாது. தற்போது விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார். அவருக்கு ரோஜர் பெடரர் கடும் சவாலாக இருப்பார்.

நடால் விம்பிள்டன் தொடரில் 2006-ல் இருந்து 2011-ம் ஆண்டு வரை சிறப்பாக விளையாடி இரண்டு முறை சாம்பியன் பட்டமும், மூன்று முறை 2-வது இடமும் பிடித்துள்ளார். 2009-ல் காயம் காரணமாக விளையாடவில்லை. அதன்பின் விம்பிள்டனில் நடாலுக்கு சறுக்கல்தான் ஏற்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்