இந்திய அணியை தடுக்க நாங்கள் வியூகம் வகுத்துள்ளோம் : ஆஸ்திரேலியா ..!
இந்திய கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.அங்கு டெஸ்ட் , ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடிவருகிறது.அதே போல இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சரியான கலவையில் இருப்பதால் இந்த முறை தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், நாதன் லயன் கூட்டணியுடன் வேகப்பந்து வந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இறங்கவுள்ளார்., இந்த முறை விராட் கோலியால் ஒரு சதம் கூட அடிக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘என்னுடைய தைரியமான, போல்டான கணிப்பு என்னவென்றால், விராட் கோலியால் இந்த முறை ஒரு சதம் கூட அடிக்க இயலாது என்பதுதான்.நாங்கள் அதற்கு விடவும் மாட்டோம். இந்திய அணியை தடுக்க நாங்கள் வியூகம் வகுத்துள்ளோம் . அவர்களை எதிர்கொண்டு துவம்சம் செய்ய தயாராகி வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலி 2014-15 சீசனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான்கு சதங்கள் விளாசினார். நான்கு டெஸ்டில் 692 ரன்கள் குவித்தார். சராசரி 86.50 ஆகும்.