தவறுகளில் இருந்து கற்று கொள்கிறேன் : இந்திய கிரிக்கெட் வீரர் நெகிழ்ச்சி..!

Default Image
இந்திய அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா (வயது 24) இவர் மிக குறுகிய காலத்தில் இந்திய அணியில் இடம்பிடுத்து அனைவரின் மனதையும் கவர்ந்தார். அவர் இதற்கு முன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். அதை தொடர்ந்து   இங்கிலாந்திற்கு எதிரான 3வது மற்றும் இறுதி சர்வதேச டி20 போட்டியில் 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று 2-1 என்ற புள்ளி கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது.  T20  போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பாண்ட்யா சிறப்புடன் செயல்பட்டார்.
Image result for ஹர்திக்அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டி20 போட்டிகளை வேடிக்கையான ஒன்றாகவே நான் காண்கிறேன்.  பந்து வீச்சில் யார்கர்களுக்கு பதிலாக வேறுபட்ட வகையில் பந்து வீசுவதிலேயே நான் கவனம் செலுத்தினேன்.
நான் ஒவ்வொரு போட்டியிலும் எனது தவறுகளில் இருந்து கற்று கொள்கிறேன் என்பதனை உறுதி செய்து கொள்கிறேன். அது எனக்கு உதவிடுகிறது என கூறியுள்ளார்.மேலும் சிறப்பாக விளையாடி 100 ரன்கள் அடித்த ரோஹித்க்கு வாழ்த்து தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்