ENGLAND VS INDIA:சாதனைகளை தெறிக்க விட்ட ஹிட் -மேன்..!

Default Image

இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் சென்றுள்ளது.இதன்படி இந்திய அணி முதலாவது இருபது ஓவர் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதேபோல் இங்கிலாந்து அணி இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கடைசி இருபது ஓவர் போட்டி நேற்று  இங்கிலாந்தின் கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பேட் செய்த இங்கிலாந்து அணி ஜெய்சன் ராய், மற்றும் ஜோஸ் பட்லர், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

முதலில் ஜோஸ் பட்லர் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அணியின் ரன்கள் 103 எட்டிய நிலையில் ஜெய்சன் ராய் 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.ஹேல்ஸ் 30 ரன்களில், மோர்கன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.ஸ்டோக்ஸ் 14 ரன்களில், ஜோனி 25 ரன்களிழும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக அட்டா நேர முடிவில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் களமிறங்கினர். இதில் இந்திய அணி 21 ரன்கள் எடுத்த நிலையில் தவான் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் ராகுல் 19 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இந்திய வீரர் ரோகித் சர்மா தனது அரை சதத்தை 28 பந்துகளில் அடித்தார்.இது இவருக்கு 16 வது சதமாகும்.பின்னர் விராட் கோலி 43 ரன்களில் ஆட்டம் இழந்தார்.இந்நிலையில் ரோகித் சர்மா 56 பந்துகளில் சதம் அடித்தார்.இது இவருக்கு மூன்றாவது சதம் ஆகும்.

பின்னர் இந்திய அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியது.இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மேலும் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ரோகித் 100 மற்றும் பாண்டியா 33 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்த இரண்டாவது வீரர்.இதற்கு முன் நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ ஆவார்.இந்திய வீரர்களில் இவர் மட்டுமே மூன்று சதங்கள் அடித்துள்ளார்.

அதேபோல் டெஸ்ட் ,ஒருநாள் ,இருபது ஓவர் போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர் மட்டுமே ஆவார்.இதுவும் ஒரு உலக சாதனை ஆகும்.

மேலும்  இருபது ஓவர் போட்டிகளில் 2000 ரன்களை எட்டிய 5-வது வீரர் ஆவார்.அதிக ரன்கள்  இருபது ஓவர் போட்டிகளில் அடித்தவர்கள்  மார்ட்டின் குப்தில் (2,271), பிரண்டன் மெக்கல்லம் (2,140), ஷோயப் மாலிக் (2,026), விராட் கோலி (2059),ரோகித் 2086  ஆவர்.இந்திய வீரர்களில் வேகமாக 2000 ரன்களை எட்டியதில் இவருக்கு இரண்டாவது இடம் ஆகும்.இவருக்கு முன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி உள்ளார். கோலி 56  இன்னிங்சிலும்,ரோகித் 77 இன்னிங்சிலும்  2000 ரன்களை எட்டியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்