இளையராஜாவை பற்றி மனம்திறந்த எஸ். பி. பி..!
எஸ். பி. பி (S.P.B) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். எஸ் பி பாலசுப்பிரமணியம் தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை பாடினார் குறிப்பாக இளையராஜாவின்இசையில் எஸ். ஜானகியோடு இணைந்து ஜோடிப்பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடககிகளுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார்
௭ஸ் பி பாலசுப்பிரமணியம்1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார்.[45] ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும். ஏ ஆர் ரகுமானின் இசை அரங்கேற்ற படம் ரோஜா இதில் எஸ் பி பி மூன்று பாடல்களைப் பாடினார். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு நிறைய பாடல்களை ஏ ஆர் ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவருகிறார். புதிய முகம் திரைப்படத்தில் “ஜுலை மாதம் வந்தால்” பாடலை அனுபமாவோடு பாடினார். அனுபமாவிற்கு அப்பாடல் அரங்கேற்ற பாடலாகும். கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் “மானூத்து மந்தையிலே மாங்குட்டி” பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை மகளே பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது எஸ் பி பிக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும்.
கடந்த வருடம் இவருக்கும் , இசைஞானி இளையராஜாவுக்கு சிறு மனக்கசப்பு வந்தது.அதற்குப் பின் இருவரும் இணைந்து பாடு வதை நிறுத்திவிட்டனர். தற்போது Z தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘ ச ரி க ம ப லிட்டில் சாம்பியன் நிகழ்ச்சியில் எஸ். பி. பி, இளையராஜாவை பற்றி மனம்திறந்து பேசினார். அதன் பதிவு இதோ…
இசைஞானி இளையராஜா பற்றி மனம்திறந்த SPB
SaReGaMaPa LIL CHAMPS Season 2
சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு #SaReGaMaPaLilChampsSeason2 #SPBOnZeeTamil#ZeeTamil #ஜீதமிழ்
Watch All the episodes on https://t.co/WUJHe6Ah6J pic.twitter.com/cJ5sUd27pW— Zee Tamil (@ZeeTamil) July 8, 2018