தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும்!உச்சநீதிமன்றம்
தனியார் மருத்துவமனைகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. டெல்லி அரசிடம் இருந்து மானியத்தில் நிலம் பெற்று கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறதா என உச்சநீதிமன்றம் கண்காணிக்கும்.மேலும் இலவச சிகிச்சைகளை கண்காணித்து அறிக்கை ஒன்றை சமர்பிக்க டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.