கடைக்குட்டிசிங்கம் படத்தின் ப்ரோமோஷன்..!
பிரபல நடிகர் பையா கார்த்தி நடிப்பில் தற்போது வெளிவரவுள்ள கடைக்குட்டிசிங்கம் பற்றிய பல தகவல்கள் வந்துள்ளன. இந்தப்படம் நடிகர் கார்த்திக்கு பெரிய திருப்புமுனையியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
கடைக்குட்டிசிங்கம் படத்தை நேஷனல் அவார்ட் வின்னர் பாண்டியராஜ் இயக்குகிறார்.இந்தப்படத்தில் நடிகை பிரியா பாவானி சங்கர், சூரி,சத்யராஜ், பானுப்ரியா போன்ற முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர்.
Suriya’s 2D Entertainments நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.வருகின்ற 13ம் தேதி திரைக்குவர காத்திருக்கிறது.
இந்த நேரத்தில் படத்தின் ப்ரோமோஷன் மற்றும் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.அதில் பங்குபெற்ற நடிகர் சூரி, கார்த்தி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோரின் புகைப்படம் வெளிவந்துள்ளது.