ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு நடந்ததா?இல்லையா?சில மணி நேரங்களில் புகார் வாபஸ்!போலீசை குழப்பிய சிதம்பரம்..!
திருட்டு புகார் கொடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டதால்,முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் வீட்டில் திருட்டு நடந்ததா, இல்லையா என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது என்று இன்று காலை புகார் அளிக்கப்பட்டது.ரூ.1.10 லட்சம் ரொக்கம்,வைர, தங்க நகைகள் திருடப்பட்டதாக ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் திருடிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு போனதாக போலீசில் காலையில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திடீரென புகாரை வாபஸ் பெற்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மேலாளர் முரளி.திருட்டு புகார் கொடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டதால், சிதம்பரத்தின் வீட்டில் திருட்டு நடந்ததா, இல்லையா என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.