என்னிடம் இருந்து தொண்டர்களை பறித்தவர் பன்னீர்செல்வம்!என்னை ஏமாற்றி விட்டதாக தீபா புகார்
துணை முதல்வர் பன்னீர்செல்வம் அரசியல் ரீதியாக என்னை ஏமாற்றி விட்டதாக எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொது செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் அதிக குழப்பங்கள் நிலவி வருகின்றது.கட்சியில் உள்ள அனைவரும் அதிகாரப் போட்டியில் உள்ளனர்.அதேபோல் பதவிக்கும் ஆசைப்பட்டு வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.பிரிந்து சென்ற பன்னீர்செல்வமும் பின்னர் பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வராக பதவி வகித்து வருகின்றார்.
மேலும் சசிகலா அணியில் அவர் சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ளார் .சுதாரித்த தினகரன் மட்டும் வழக்கில் இருந்து தப்பி தற்போது ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார்.பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியையும் தொடங்கினர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சும்மா இல்லாமல் தானும் ஒரு கட்சியை ஆரம்பிப்பேன் என்று எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை ஆரம்பித்தார்.
இந்நிலையில் தற்போது எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொது செயலாளர் ஜெ.தீபா கருத்து ஒன்றை கூறியுள்ளார் .அதாவது அரசியல் ரீதியாக என்னை ஏமாற்றி விட்டு, என்னிடம் இருந்த தொண்டர்கள் சிலரை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தன் பக்கம் இழுத்து கொண்டார். இதனால் அவர் செல்வாக்கு உயர்ந்துள்ளது” என்று எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொது செயலாளர் ஜெ.தீபா திருச்சியில் கூறியுள்ளார் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.