சன் மியூசிக் அஞ்சனாவிற்கான விழா இது..!
பிரபல லைவ் சேனல் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி அஞ்சனாவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அஞ்சனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விதத்திற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.
சின்னத்திரை உலகில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா. அவரது தமிழ் உச்சரிப்பு, இனிமையான பேச்சு காரணமாக அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டமே இருக்கிறது.
சேனல் மட்டுமின்றி பல்வேறு ஷோக்களிலும் பங்களித்து வந்த அஞ்சனாவுக்கும், பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் அறிமுகமான சந்திரனுக்கும் காதல் ஏற்பட்டு, சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டார்கள். இப்பொது இவருக்கு வளைக்கப்பும் நடந்து வருகிறது.தனது திருமண வாழ்வில் மிகவும் மகிச்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார் .