காட் ஆஃப் தி ஆஃப் சைட் ( GOD OF THE OFF SIDE ) நாயகனின் பிறந்தநாள் இன்று..!
சௌரவ் சந்திதாஸ் கங்குலி (ஜூலை 08, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் கிரிக்கெட் அவையின் தலைவராக உள்ளார்.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் பேட்ஸ்மேன் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தி ஆஃப் சைட் ( GOD OF THE OFF SIDE ) என அழைக்கப்படுகிறார்.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை நிர்வகிக்கும் நான்கு பேர்கொண்ட குழுவில் ஒவராகத் திகழ்கிறார்.இவர் உச்ச நீதிமன்றத்தினால் ஜனவரி 2016 இல் நியமனம் செய்யப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக்கின் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
ஒருநாள் பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தற்போது எட்டாம் இடத்திலும் , 10,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், இன்சமாம் உல் ஹக் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
இந்தியத் கிரிக்கெட் அனியில் இடம் கிடைப்பதற்கு முன்பாக ரஞ்சிக் கோப்பை,துலீப் கோப்பை போன்ற தொடர்களில் விளையாடி வந்தார். பின் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் 131ரன்கள் அடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இலங்கைத் கிரிக்கெட் அணி, பாக்கித்தான் கிரிக்கெட் அணி,ஆத்திரேலியத் கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றதன் மூலம் இந்திய அணியில் இவரின் இடம் நிரந்தரமானது. 1999 கிரிக்கெட் உலகக்கோப்பையில் இவரும் ராகுல் திராவிட்டும் இணைந்து 318 ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தனர். தற்போது வரை இந்தச் சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது. இந்தியக் குடிமை விருதுகளில் விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருதை 2004 இல் பெற்றார்.