இந்தியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! அப்படி என்ன இருக்கு..!
மோடி கேர் எனப்படும் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் ,கீழ் ஆயிரத்து 354 மருத்துவ சிகிச்சைகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதை லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே 50 கோடி இந்தியர்களுக்கும் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுத்து வரும் மத்திய அரசு, ஆகஸ்ட் 15ஆம் தேதி, திட்டத்தை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 50 கோடி ஏழைக்குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மோடிகேர் எனக் குறிப்பிடப்படும் இந்த சுகாதார திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஆயிரத்து 354 மருத்துவ சிகிச்சைகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு பல மாநில அரசுகள் எதிர்ப்புகள் தெரிவித்தவண்ணம் உள்ள. ஏனெனில் மோடி கேர் திட்டத்துக்கு, மாநிலங்களும் பங்கீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பதே காரணமாகும்.தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.இந்த மோடி கேர் திட்டம் மூலம் இனி அனைவரும் மிகவும் குறைவான முறையில் அறுவைசிகிச்சை செய்யலாம் என்றும் இந்த திட்டத்தில் அதிகப்படிக 1.5லட்சம் வரை மட்டுமே செலவு ஆகும் என்றும் கூறுகின்றனர் .