வரலாற்றில் இன்று (ஜூலை 7)!வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நாயகனின் பிறந்த தினம் இன்று!

Default Image

இன்று உலகின் தலை சிறந்து வீரரும்,இந்திய அணியின் வெற்றி கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாள் ஆகும்.

மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியன் முன்னால் கேப்டன் ஆவார்.இவர் ஜார்கண்டில் உள்ள ராஞ்சியில் பான் சிங்கிற்கும்,தேவகி தேவிக்கும் பிறந்தவர் ஆவார்.தோனிக்கு உடன் பிறந்தவர்கள் சகோதரி  ஜெயந்தி குப்தா மற்றும் சகோதரர் நரேந்திர சிங் தோனி ஆவார்கள்.

Image result for வரலாற்றில் இன்று தோனி

தோனி  முதலில் பேட்மிட்டன் மற்றும் கால்பந்து விளையாட்டில் தான் ஆர்வம் அதிகம் கொண்டிருந்தார்.இவர் விளையாடிய கால்பந்து அணிக்கு இவர் கோல் கீப்பர் ஆவார்.பின்னர் இவர் முதன் முதலாக கீப்பிங்கில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் கமாண்டோ கிரிக்கெட் கிளப்(1995–1998) அணிக்காக விளையாடினார்.இந்த போட்டியில் தோனி சிறப்பாக விளையாடியதால் அவர் 16 வயது உட்பட்டோர்க்கான வினு மங்கத் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.பின்னர் இந்த போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடிதால் அவர் பத்தாம் வகுப்பில் இருந்து கிரிக்கெட் மீது அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

Image result for dhoni hd

பின்னர் தோனி டிக்கெட் பரிசோதகராக கோரக்பூர் ரயில் நிலையத்தில்  (2001 to 2003) வேலை பார்த்தார்.தோனி அங்கு சக சக ஊழியர்களுடன் ஒரு அறையில் தான் வசித்து வந்தார்.

பின்னர் அவர் இந்திய ஏ அணியில் சிறப்பாக விளையாடிதால் அவர்  இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.முதலாவது ஒருநாள் வங்கதேச அணியுடன் டிசம்பர் 23 ஆம் தேதி 2004-ல் விளையாடினார்.ஆனால் ரன் அவுட்டாகி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர்.

Image result for dhoni hd

பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் டிசம்பர் 2ஆம் தேதி  இலங்கை அணியுடன் 2005-ல்,இருபது ஓவர் போட்டியில் டிசம்பர் 1 தேதி தென் ஆப்ரிக்கா அணியுடன் 2006 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

 

பின்ன தோனி கேப்டனாக இருந்து  இருபது ஓவர் உலகக்கோப்பை ,50 ஓவர் உலகக்கோப்பை,மினி 50 ஓவர் உலகக்கோப்பை என அனைத்து உலக கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான்.

இந்த மகத்தான மாமனிதனின் பிறந்த தினம் இன்று தான்..இவர் தனது 37-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்