மலேசியா அரசு இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயகத்தை திருப்பி அனுப்ப மறுப்பு !
மலேசியா அரசு இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயகத்தை திருப்பி அனுப்ப மறுப்பு தெரிவித்துவிட்டது.
இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயகம் மும்பையை சேர்ந்தவர் ஆவார்.இவர் ஒருமுறை தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.ஆனால் அவர் மலேசியாவிற்கு தப்பினார்.அங்கு அவருக்கு மலேசியா அரசு நிரந்தர குடியுரிமை வழங்கியது.இதனையடுத்து இந்திய அரசும் மலேசியா அரசும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயகத்தை இந்தியாவிற்கு கொண்டு வர ஒப்பந்தம் போட்டாது.
இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயகம் மலேசியாவின் நிரந்தர குடியுரிமை பெற்றதால் இந்தியாவிற்கு அவரை அனுப்ப மறுத்துவிட்டார் மலேசியாவின் பிரதமர் மாஹதீர் முகமது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.