நீட் தேர்வு விவகாரம்: சிபிஎஸ்இ அடிமை போக்குடன் செயல்படுகிறது!உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம்

Default Image

நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கானது நீட்தேர்வில் தமிழ் வினாத்தாளுக்கான மொழி பெயர்ப்பில் குளறுபடி இருந்ததால் கருணை மதிப்பெண் கோரி தொடர்பட்ட வழக்கு ஆகும்.இதை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது என்று கண்டனம் தெரிவித்தது.கேள்விக்கான விடைகளை பெரும்பான்மை அடிப்படையில் தேர்வு செய்கின்றீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.பீகார் மாநிலத்தில் மட்டும் அதிகமான மாணவர்கள் வெற்றிபெற்றது எப்படி? வழக்கு விசாரணைக்கு வருவது தெரிந்தும் அறிவித்த நாளுக்கு முன்பே தேர்வு முடிவை வெளியிட்டது ஏன்?என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்