சேலம்-சென்னை 8 வழிச்சாலை:திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் பாராட்டு!தமாகா மனு தள்ளுபடி
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தின் நோக்கம், பயன்களை முழுமையாக தெரியாமல் எதிர்க்கக்கூடாது என்று உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமாகா சார்பில் போராட்டம் நடத்த வழக்கு ஓன்று தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த நீதிபதிகள் சேலம் – சென்னை 8 வழி சாலை திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். சென்னை – சேலம் இடையே அமைய உள்ள 8 வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. பன்னாட்டு தொழில் நிறுவனங்களால் வேலைவாய்ப்பு பெருகும் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இருபெரும் நகரங்களுக்கு இடையே சாலை அமைவதால் இடையில் உள்ள நகரங்கள், கிராமங்கள் இணையும்.
இறுதியாக திட்டத்துக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய தமாகா மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் சாத்தூர் மாரியம்மன் கோயில் திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகோரி த.மா.க சார்பில் தொடரப்பட்டது ஆகும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.