தூத்துக்குடி துப்பாக்கி சூடு: துப்பாக்கிச்சூட்டுக்கு பின் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க அருணா ஜெகதீசன் வரம்பு அதிகரிப்பு!

Default Image

துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் வரம்பை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.இவர் இருமுறை தூத்துக்குடிக்கு வந்து தனது விசாரணையை நடத்தினார்.பொதுமக்கள் ,அதிகாரிகள் மற்றும் பலரிடம் வாக்குமூலமும் பெற்றார்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் வரம்பை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  துப்பாக்கிச்சூட்டுக்கு பின் நடந்த சம்பவங்கள் குறித்தும் அருணா ஜெகதீசன் விசாரிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 22 ஆம் தேதிக்கு பின்னர் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் மற்றும் புகார்களை வரும் 27ம் தேதி வரை அருணா ஜெகதீசன் ஆணையத்தில் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது தமிழக அரசு.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்