மீண்டும் வருகிறார் எம்.எஸ்.தோனி !இதிலும் அவரையே தோனியாக நடிக்க வைக்க முயற்சி..!
இந்திய அணியின் முன்னால் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மையமாக கொண்டு எம்.எஸ்.தோனி தி அண்டோல்டு ஸ்டோரி திரைப்படம் வெளியானது.இந்த படம் கடந்த 2016 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது.
இந்த படத்தின் முதல் பாகத்தில் பாலிவுட் நடிகர் சுசந்த் சிங் ராஜ்புட் தோனியாக நடித்திருந்தார்.தோனியின் முதல் காதலியாக திஷா பதானி நடித்திருந்தார்.தோனியின் மனைவி சாக்சி வேடத்தில் கியார அத்வானி நடித்திருந்தார்.மேலும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.இந்த படம் 104 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 216 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தை ஆர்எஸ்விபி பட நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.முதல் படத்தின் நாயகனையே இந்த படத்திலும் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.