எம்எல்ஏக்களுக்கு எங்கு சென்றாலும் மரியாதையே இல்ல!எனக்கும் சொந்தமா பொறியியல் கல்லூரி இருக்கு!ஆனா மரியாதை இல்ல!குமுறிய காங். எம்எல்ஏ
எம்எல்ஏக்களுக்கு எங்கு சென்றாலும் மரியாதை இல்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ பாண்டி தெரிவித்துள்ளார்.
இன்று சட்டபேரவையில் கடுமையான விவாதம் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் எம்எல்ஏ பாண்டிக்கு ஒதுக்கிய நேரத்தில் அவர் தனது கருத்தை தெரிவித்தார்.அதில் எம்எல்ஏக்களுக்கு எங்கு சென்றாலும் மரியாதை இல்லை, அவர்களுக்கு தனி அதிகாரம் வேண்டும். நான் படிக்காதவன் தான்.ஆனால் பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி நடத்துகிறேன். இதில் சம்பாதிக்க முடியாது, கல்வி முக்கியம் என்று கூறினார்.மேலும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு 2 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்த்த வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்எல்ஏ பாண்டி கோரிக்கை விடுத்தார்.
இதேபோல் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால் நிதியை உயர்த்த வேண்டும் என்றும் திமுக எம்எல்ஏ பிச்சாண்டியும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.