லிப் லாக் முத்தமெல்லாம் இப்போது சர்வ சாதாரணம் தான் புரிஞ்சிகொங்கையா….!
இயக்குனர் ராமின் தரமணி, இயக்குனர் மிஸ்கினின் துப்பறிவாளன் படத்திற்கு பிறகு அடுத்து வெளிவருகிறது ஆண்ட்ரியா நடித்த அவள் படம். இதனை நடிகர் சித்தார்த், தயாரித்து நடித்துள்ளார். சித்தார்த்தின் மனைவியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தில் ஒரு பாடல் காட்சியில் 7 லிப் லாக் முகத்தக்காட்சி இடம்பெற்றுள்ளது. படம் முழுக்க 15 முத்தக் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்ட்ரியா கூறியதாவது:முன்பு சினிமா யதார்த்த வாழ்க்கையை அவ்வளவாக காட்டவில்லை. ஆனால் இப்போது சினிமா யதார்த்தங்களை காட்டுகிறது. அப்படித்தான் யதார்த்தத்தில் சகஜமாகிவிட்ட லிப் லாக் முத்தக் காட்சிகளை படத்தில் காட்டுகிறார்கள். நிஜ வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி லிப் லாக் சாதாரண விஷயம்தான். அதை ஏன் பெரிது படுத்துகிறார்கள்.என்னை சித்தார்த் முத்தக் காட்சியில் வற்புறுத்தி நடிக்க வைத்தரா என்று கேட்கிறபோது சிரிப்பு வருகிறது. நான் என்ன சின்னபிள்ளையா வற்புறுத்தி நடிக்க வைப்பதற்கும், ஏமாற்றி நடிக்க வைப்பதற்கும். லிப் லாக் முத்தமெல்லாம் இப்போது சர்வ சாதாரணம் அதை பெரிது படுத்தாதீர்கள் என்கிறார் ஆண்ட்ரியா.