வரலாற்றில் இன்று-இந்தியாவில் முதல் நடமாடும் தபால் அலுவலகம் பூனா நகரில் செயல்பட ஆரம்பித்தது
வரலாற்றில் இன்று – நவம்பர் 11, 1975 – இந்தியாவில் முதல் நடமாடும் தபால் அலுவலகம் பூனா நகரில் செயல்பட ஆரம்பித்தது. அது மக்களுக்கு அஞ்சல் சேவை அதிகம் தேவைப்பட்ட காலம். அஞ்சலகங்கள் இல்லாத பகுதிகளிலும் அஞ்சலகங்களின் பணி நேரம் முடிந்துவிட்ட நேரங்களிலும் இது போன்ற நகரும் அஞ்சலக வேன்கள் கொண்டு நிறுத்தப்பட்டு தபால் தலை விற்பனை, ரெஜிஸ்ட்ரேசன், மணி ஆர்டர் போன்ற அஞ்சல் சேவைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டன. அதன் பின்னர் இதர பெருநகரங்களிலும் விரிவுபடுத்தப்பட்ட இச்சேவை தொடங்கி 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.