ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்பதை தீர்ப்பு தெளிவுப்படுத்தியுள்ளது. ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கும் 100க்கு 110% பொருந்தும் என்றும் கூறியுள்ளார்.