வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் விடுவிப்பு!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
1991-96இல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது ரூ.57 லட்சம் சொத்து சேர்த்ததாக புகார் எழுத்தது.பின்னர் 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50,000 அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் ஜனார்த்தனன்.இந்நிலையில் தற்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் விடுவிக்கப்பட்டுள்ளார்.இன்று மேல்முறையீடு மனு விசாரணைக்கு வந்த போது அவரை விடுவிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.