ஒரே நேரத்தில் மாநில சட்டமன்றங்களுக்கும், மக்களவைக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை!தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்
மாநில சட்டமன்றங்களுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தற்போது வாய்ப்பில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே மாநில சட்டமன்றங்களுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதற்கு பல அரசியல் கட்சி தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.