புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எச்சரிக்கை!டெல்லி ஆளுநர் நிலைதான் உங்களுக்கும்!அரசு கொறடா
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தன்னை சரிசெய்து கொள்ளாவிடில் நீதிமன்றம் செல்வோம் என்று அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. அமைச்சரவையுடன் இணக்கமாக துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். எல்லா விஷயங்களிலும் அமைச்சரவைக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை என்று தமைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரவித்தார்.இது டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடக்கும் அதிகார மோதல் குறித்த வழக்கின் தீர்ப்பு ஆகும். இந்த வழக்கின் தீர்ப்பு டெல்லி மட்டுமின்றி புதுச்சேரிக்கும் பொருத்த வாய்ப்புள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து கிரண்பேடி தன்னை சரிசெய்து கொள்ளாவிடில் நீதிமன்றம் செல்வோம் என்று அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளார்.கிரண்பேடி சரிசெய்துகொள்ளாவிடில் புதுச்சேரி அரசும் நீதிமன்றம் செல்லும் என்று புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.