துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது!உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Default Image

டெல்லியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என விளக்கமளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் மாநில அரசு, துணைநிலை ஆளுநர் இடையே யாருக்கு அதிகாரம் என்பது குறித்து ஆம் ஆத்மி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர்.டெல்லியின் அதிகாரத்தை நிர்ணயிக்கும் அரசியல் சாசன பிரிவின் அம்சங்கள் பற்றி விளக்கம் அளித்தது உச்ச நீதிமன்றம்.

ஆரசியல் சாசனத்தை மதிக்கும் படியே நிர்வாகங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு டெல்லி மட்டுமின்றி புதுச்சேரிக்கும் பொருத்த வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. அமைச்சரவையுடன் இணக்கமாக துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். எல்லா விஷயங்களிலும் அமைச்சரவைக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை என்று  தமைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரவித்துள்ளார்.

மேலும்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள் மீது துணைநிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். மக்கள்நல திட்டங்கள் துணைநிலை ஆளுநரால் தாமதமானாலும், அரசால் தாமதமானாலும் இருவருமே பொறுப்பு தான். மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவதே சாலச்சிறந்ததாக இருக்கும் என்றும் கருத்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கின் தீர்ப்பில் அரசியல் சாசன பிரிவு 2389ஏ பற்றிய அம்சங்கள் விளக்கப்பட்டது.   நீதிபதி கன்வில்கர் தனது தீர்ப்பை வாசித்தா ர்.நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது. ஜனநாயகத்தில் அதிகாரம் தொடர்பான குழப்பத்துக்கு இடமில்லை. அமைச்சரவையின் முடிவை துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்கலாம். ஆனால் ஒப்புதல் அவசியமல்ல.

இதேபோல் நீதிபதி சந்திரசூட்  நிர்வாக அதிகாரம் முழுவதும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது .தனது சொந்த யோசனைகளையும் பொருத்திப் பார்த்து துணை நிலை ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று அறிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்