சென்னையில் ஆனந்தன் சுட்டுக்கொலை:சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் சாண்டில்யன் விசாரணை!
சென்னையில் ரவுடி என்கவுன்டர் சம்பவம் பற்றி சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் சாண்டில்யன் விசாரிக்கவுள்ளார்.
முன்னதாக சென்னையில் ஆனந்தன் என்பவர் நேற்று இரவு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. சுட்டுக் கொல்லப்பட்ட ஆனந்தன் காவலர் ராஜவேலுவை அரிவாளால் தாக்கியவர்.
நேற்று முன்தினம் ராயப்பேட்டை முதல் நிலைக் காவலர் ராஜவேல் ரவுடிகளால் வெட்டப்பட்டார்.
இந்நிலையில் தற்போது ரவுடி என்கவுன்டர் சம்பவம் பற்றி சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் சாண்டில்யன் விசாரிக்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது .