செய்யக்கூடாததை செய்த பிரியங்கா சோப்ரா!பாய்கிறது நோட்டீஸ்..!
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறி கட்டிடத்தை கட்டியதாக அவர் மீது சிட்டி கார்ப்பரேஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவருக்கு மும்பையில் சரிஸ்மா பியூட்டி ஸ்பா மற்றும் சலூன் என்ற பெயரில் ஹிந்தி அழகு நிலையம் இயங்கி வருகின்றது. நடிகை பிரியங்கா சோப்ரா அலுவலகமும் இந்த கட்டிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில், பிரியங்கா சோப்ரா, அழகு நிலையமும் அதன் வெளி கட்டிடங்களும் விதிகளை மீறி கட்டியதாக ஐந்து பேர் புகார் கூறினார். தளத்தை பார்வையிட்ட மாநகர அதிகாரிகள் வணிக வளாக மேலாளரிடம் விளக்கம் கேட்டதாக கூறப்பட்டது.
சில மாற்றங்கள் செய்யப்பட்டன அவை வாஸ்து சாஸ்திரம் என்ற அடிப்படையில் கட்டப்பட்டதாக விளக்கம் அளித்தாலும்,இருந்தாலும் விதிகள் மீறப்படுவதை விளக்குவதற்காக நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.