மும்பையில் ரயில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்தததில் 6பேர் படுகாயம்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காலை முதலே கனமழை பெய்துவருகிறது.
மும்பையின் ஆந்தேரி ரயில் நிலையம் அருகே கோகலே பாலத்தில் பாதசாரிகள் நடந்து செல்லும் இடம் மட்டும் இடிந்து விழுந்தது.இதில் 6 பேர் காயமடைந்தனர். பாலம் இடிந்து விழுந்ததால் மேற்கு ரயில்வே மற்றும் துறைமுகத்துக்கு செல்லும் ரயில் வழித்தடம் துண்டிக்கபட்டது.
அதே போல பொறியாளர்கள், ஊழியர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு தொழிலாளர்கள் இடிபாடுகளை அகற்றி, துறைமுக வழித்தடத்தில் மட்டுமே மின் இணைப்பை மறுசீரமைத்தனர்.மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூட இந்த இடத்திற்கு சென்று வேலையை முடுக்கி விட்டார்.
மதியம் ரயில் போக்குவரத்து துறைமுகத்தில் தொடங்கியது. பிற மின்னிணைப்பைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.