தென் மாநிலங்களை சேர்ந்த எத்தனை மாணவர்கள் தமிழக கல்லூரிகளில் படிக்கின்றனர்?சென்னை உயர்நீதிமன்றம்
தென் மாநிலங்களை சேர்ந்த எத்தனை மாணவர்கள் தமிழக கல்லூரிகளில் படிக்கின்றனர் என்பது பற்றிய விவரம் தொடர்பாக மத்திய அரசு ஜூலை 8இல் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று இது தொடர்பாக இரட்டை இருப்பிட சான்று மூலம் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் பிற மாநிலத்தவர்கள் சேர்வதை தடுக்கக்கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தீர்ப்பு வழங்கினார்.அதில் நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்கள் நீட்டால் பாதிக்கப்பட்டோரின் கல்விச்செலவை ஏற்கலாமே என்று கூறியுள்ளார்.அரசியல் கட்சி தலைவர்கள் குறைந்தது 10 ஏழை மாணவர்களின் கல்விச்செலவை ஏன் ஏற்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் 2ஆம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் தருவது வேதனையளிக்கிறது. 2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரப்படுவதாக புகார்கள் வந்துள்ளது.
இரட்டை இருப்பிடச்சான்றால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தென் மாநிலங்களை சேர்ந்த எத்தனை மாணவர்கள் தமிழக கல்லூரிகளில் படிக்கின்றனர் என்பது பற்றிய விவரம் தொடர்பாக மத்திய அரசு ஜூலை 8இல் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.