காவலர்களுக்கு வாரவிடுமுறை!உள்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
மற்ற துறைகளில் வழங்கப்படுவது போல காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்குவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று இது தொடர்பாக காவலர் நலன், பணிச்சுமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.இதில் தமிழக டிஜிபி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் உயர் அதிகாரிகளின் உறவினர்களின் வீடுகள், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளின் வீடுகளில் காவல்துறை ஓட்டுநர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை.உயர் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர், ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு அரசு வாகனம் ஒதுக்கவில்லை. டிஜிபி முதல் எஸ்பிக்கள் வரை 170 வாகனங்கள் போலீசாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தமிழக டிஜிபி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்தார்.
இதன் பின் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு,மக்களுக்கு பிரச்னை என்றால் போலீசிடம் செல்வார்கள், போலீசுக்கே பிரச்னை என்றால் என்ன செய்வது? என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் காவல்துறையினர் அதிக அளவில் தாக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. திட்டமிட்ட சதிச் செயல்களை தடுத்து நிறுத்தினால்தான் போலீஸ் மீதான தாக்குதல் குறையும்.
இறுதியாக மற்ற துறைகளில் வழங்கப்படுவது போல காவலர்களுக்கும் ஏன் வார விடுப்பு வழங்கக் கூடாது ? இதில் உள்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.