கமலஹாசனுக்கு சவால் விடுத்த தமிழ்நாடு பிராமணர் சங்கம்..!
தற்போது சில தினங்களுக்கு முன்னர் இந்தியா ட்விட்டர் நடத்திய ‘வணக்கம் ட்விட்டர் ‘ என்ற நிகழ்ச்சியில் , நடிகர் கமல்ஹாசனிடம் கேள்விகளை கேட்க #AskKamalHaasan என்ற ஹேஸ்டேக்கை அறிமுகப்படுத்தினார். இதில் பலரும் அவரிடம் கேள்விகளை கேட்டனர்.
நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன். https://t.co/9YKk6wji5c
— Kamal Haasan (@ikamalhaasan) June 30, 2018
அதில் ஒரு கேள்வி நீங்கள் படித்த நூலில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய நூல் என கேட்டபோது.கமலஹாசன் தான் விரும்பாத நூலும் , தன்னை மிகவும் பாதித்த நூல் பூணூல் என்று பதிவிட்டார்.
இந்த பதிவை கண்டித்து தமிழ்நாடு பிராமணர் சங்கம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் கமலை அரைவேக்காடு என்றும் போலி அரசியல்வாதி என்றும் இவன் எங்கள் பிராமண குலத்தில் பிறந்தது எங்களுக்கு வெக்கமாக இருக்கிறது என்றும் கூறினார்.மேலும் வரும் தேர்தலில் நாங்கள் கமலுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என்றும் கூறினார்.