கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை! அரசு பள்ளி ஆசிரியர் கைது !
கன்னியாகுமரி அருகே திருவிதாங்கோடில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.பின்னர் இந்த புகாரை அடுத்து அரசு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் ஆவேசத்தில் ஈடுபட்ட்டனர்.பின்னர் பெற்றோர்களின் தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் செல்லத்தை போலீசார் மீ்ட்டு, கைது செய்தனர்.