கல்யாணம் ஆகமால் சேர்ந்து வாழ்ந்து விட்டு கல்யாணம் செய்ய மறுத்தால் இழப்பீடு கோர முடியுமா?உச்சநீதிமன்றம் கேள்வி

Default Image

திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்தவர்களுக்காக ஒரு பெண் இழப்பீடு கோரலாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் ஒரு ஆண்  பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக பெண் ஒருவர்  குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தன் மீது  குற்றம்சாட்டப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் அந்த ஆண்  புகார் அளித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் பெண் சார்பாக  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது மற்றும் அந்த பெண்ணின் சார்பாக வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அவருடன் வாழ்ந்த ஒரு நபர் திருமணம் செய்து கொள்ளும்படி கூறிவிட்டு ஏமாற்றியதாக அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது . திருமணம் செய்துகொள்வார் என்ற உறுதியில் ஆறு ஆண்டுகள் அவருடன் வாழ்ந்து வந்தார், ஆனால் அந்த  நபர்  அவளை ஏமாற்றிவிட்டார் , அவளுக்கு எதிராக ஒரு குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ததாக விளக்கினார்.

ஆண் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து விட்டு பின்னர் வழக்கு தொடர்ந்தால் அது  குற்றவியல் சட்டத்தின் கீழ் வராது என்று வழக்கறிஞர் வாதிட்டார். நீதிபதிகள், இருதரப்பு வாதத்தை கேட்டு, ஆண் மீதான குற்றவியல் வழக்கு விசாரணைக்கு  இடைக்கால தடை விதித்தது.

மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாதிக்கப்பட்டவர்கள் வாழ மறுப்பது மற்றும் திருமணம் செய்ய மறுப்பது ஆகியவற்றிற்கு இழப்பீடு கோர முடியுமா என்று கேள்வி எழுப்பினர். இந்த விஷயத்தில் உதவி செய்ய மத்திய அரசு தலைமை வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்