2022-க்குள் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க வேண்டும்! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கூடங்குளம் அணு ஆலையை மூட உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கை  விசாரித்த உச்சநீதிமன்றம், கூடங்குளம் அணு உலை கழிவுகளை சேமிக்க புதிய கட்டுமானம் மேற்கொள்ள மத்திய அரசுக்கு அவகாசம் அளித்துள்ளது. மத்திய அரசுக்கான கால அவகாசத்தை 2022 வரை நீட்டித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் கூடங்குளம் அணு ஆலையை மூட உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.2022 ஏப்ரல் இறுதிக்குள் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க வேண்டும் என்று  மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment