காவிரி விவகாரம்:அனைத்துக்கட்சி கூட்டம்!முதலமைச்சர் பழனிசாமி பகீர் தகவல்
அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி இது குறித்து கூறுகையில், காவிரி ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து பிரச்னைகளும் பேசி தீர்க்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.மத்திய நீர்வளத் துறை ஆணையர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் இன்று காவிரி ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சித்தலைவர்களும் அனைத்து கட்சிக்கூட்டம் காவிரி தொடர்பாக கூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமிக்கு கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.