FIFA WORLD CUP 2018:ஸ்பெயின்-ரஷ்யா அணிகளுக்கு இடையே பெனால்டி சூட் -அவுட் முறை!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2 வது சுற்று இன்று இரண்டு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. மாஸ்கோவில் லூஸ்னிகி ஸ்டேடியத்தில் 7.30 மணியளவில் ஸ்பெயின்-ரஷ்யா அணிகள் மோதுகின்றது.
உலக தரவரிசையில் 10 வது இடத்த்தில் இருக்கும் ஸ்பெயின் 70 வது இடத்தில்லை உள்ள ரஷ்யாவுடன் வெற்றிபெற்று ஆர்வத்துடன் நுழைந்து காலிறுதியில் நுழை தீவிரமாக உள்ளது. 2014-ல் சாம்பியன்ஷிப் அணி லீக்கில் ஒரு கடுமையான போருக்கு பிறகு நாக் அவுட் முன்னேறியது.
போட்டியை நடத்தும் ரஷ்யா உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஸ்பெயினை அதிர்ச்சிக்குள்ளாக்க காத்திருக்கின்றது. தற்போது ஸ்பெயின்-ரஷ்யா அணிகள் மோதும் ஆட்டம் தொடங்கியது.ஸ்பெயின் அணி ஆட்டத்தின் தொடக்கத்திலே முதலாவதாக கோல் அடித்தது.அந்த அணியின் செர்கியோ ரோமொஸ் முதல் அடித்தார்.
பின்னர் 40 வது நிமிடத்தில் ரஷ்ய அணி பெனால்டியை கோலாக்கியது.இதன்மூலம் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமமாக உள்ளது.அர்தம் டிஸ்யுபா (Artem Dzyuba) பெனால்டியை சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார்.
தற்போது நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்-ரஷ்ய அணிகள் இடையேயான போட்டியில் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 90 நிமிடம் வரை 2 அணிகளும் தலா ஒரு கோல் மட்டுமே அடித்ததால் கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த நேரமும் முடிந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை பின்பற்றப்படுகிறது.